
அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது அவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியிருந்தது
.இந்த விசாரணைகளின்படி அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டு, அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாக அவர் சார்பில் வாதாடிய சட்டத்தரணியான சுனில் வட்டகல கூறினார்.
அவருக்கான தண்டனை பிறிதொரு தருணத்தில் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டு இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. அதில் முதலாவது நீதிமன்ற விசாரணையில் அவர் இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் சம்பந்தப்பட்டதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அவர் ஏற்கனவே குற்றங்காணப்பட்ட நிலையில் அவரது பதவிகள் அனைத்தும் அவர் வசம் இருந்து பறிக்கப்பட்டதாக முன்னதாக அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’