இன்றைய தினம் (15) காலை கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற் பயற்சி நிலையத்திற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இங்கு ஆடைத் தொழிற் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் நூற்றுக் கணக்கான யுவதிகளைச் சந்தித்த அமைச்சர் அவர்களது தொழில்முறைசார் திருப்தி குறித்தும் தேவைகள் மற்றும் குறைநிறைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’