யுத்தம் நடந்த சகல நாடுகளிலும், அதன்பின்னர் சீர்திருத்தம் ஒன்று ஏற்படுவது வாடிக்கை. அதையே நாமும் ஆன்மீக சீர்திருத்தமாக இலங்கையில் மேற்கொள்ளவுள்ளோம் எனப் பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று தெரிவித்தார்
.புத்த வருட பிறப்பு 2600ஐக் கொண்டாடுவதற்கான முன்னோடி நடவடிக்கையாக சமய மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கான தேசிய வேலைத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக, கண்டி மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் கூட்டமொன்று இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5. சீனாவில் 9 வீதம். இந்தியாவில் 8 வீதம். இது யுத்தம் முடிவடைந்த கடந்த 16 மாத காலத்தில் நாம் பெற்ற வெற்றியாகும்.
ஆனால் யுத்தம் போன்று ஒன்று இல்லாமல் இருந்திருப்பின் இன்னும் பல வெற்றிகளை நாம் அடைந்திருக்க முடியும். ஆனால் ஆன்மீக வெற்றியில்லாத பொருளாதார வெற்றி இல்லை.
"உலக வரலாற்றை எடுத்து நோக்கும் போது யுத்தம் நடந்த சகல நாடுகளிலும் யுத்தத்தின் பின் சீர்திருத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதையே நாம் ஆன்மீக சீர்திருத்தமாக மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்காகவே ஆன்மீக அபிவிருத்திக்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். இதன் அடிப்படையில் பௌத்த சமயம் மட்டுமல்லாது ஏனைய சமயங்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளோம். இதற்கு சகல அரச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் தேவை" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’