வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மழைக்கு முதல் தற்காலிக வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பாராளுமன்ற உறுப்பினர்

திர்வரும் மழைகாலத்திற்கு முன்பதாக மீள்குடியேறிய மக்களுக்கான தற்காலிக வீட்டு வசதிகள் பூர்த்தி செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (26) முரசுமோட்டை மகாவித்தியாலயத்தில் முரசு மோட்டை ஊரியான் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் நான் உங்களது மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் மூலம் உங்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வேன். அத்தோடு இப் பிரதேசத்தில் மீள் குடியேற்ற செயற்பாடுகள் என்பது முழுஅளவில் திருப்திகரமானதாக அமையவில்லை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இருப்பினும் அது நிரந்தரமானது அல்ல. படிப்படியாக உங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படுமெனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்த சந்திரகுமார் அவர்கள் அவற்றில் சிலவற்றை உடனடியாகவே தொலைபேசி மூலம் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.
வீட்டுத் திட்டம் தொடர்பாக மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தற்போது வீட்டுத் திட்டம் கிடைக்கப்பெறாத அனைவருக்கும் இந்திய வீட்டுத் திட்டம் வழங்கப்படுமெனவும் மற்றும் முதியோர்கள் இருவர் உள்ளடங்கிய குடும்பங்கள் தொடர்பில் அவர்களுக்கான அரச உதவிகள் கிடைக்கப் பெறுவது சம்பந்தமாக விசேடமாக கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படுமெனவும் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் முரசுமோட்டை மக்கள் அமைப்பு பிரதிநிதி சுதர்சன் ஈ.பி.டி.பி கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் முரசு மோட்டை ஊரியான் கிராமஅலுவலர்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’