வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 செப்டம்பர், 2010

இது ஆக்கத்திற்குரிய காலம்! அதனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் - கிளிநொச்சி விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ற்போது ஓர் ஆக்கத்திற்கான காலப்பகுதியினை அரசு எங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை இறுகப் பற்றி முன்னோக்கிச் செல்வது எங்களின் பொறுப்பு என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் கிளிநொச்சி விவசாயத் திணைக்களத்தில் இடம்பெற்ற விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் குறுகிய அரசியல் இலாபத்திற்காக உங்களுக்கு அழிவை நோக்கியப் பாதையே காண்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசு எங்களுக்கு ஆக்கத்தை நேர்கிய பாதையை அமைத்துத் தந்துள்ளது. அதனை இறுகப் பற்றி முன்னேற்றகரமான வாழ்வினை நோக்கிச் செல்லுங்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களின் அபிவிருத்திக்கு துணையாக நிற்போம் எனவும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ அவர்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தால் வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல நாடு பூராகவும் உள்ள விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்துள்ள இக்காலப்பகுதியில் அரசு விவசாயத்துறை அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறையோடு செயற்படுவதாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாயிகள் விசேடமாக ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க எதற்கு பிரதேச விவசாயிகள் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் அபிவிருத்தியின் பெரும் பகுதி வடக்குக்கு திருப்பப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேச விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதில் அரசு முழு அக்கறையோடு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’