யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கான திட்டவரைபுகளையும் ஆரம்ப செயற்பாட்டு வழிகளையும் வடமாகாண பொறியியலாளர் சங்கம் முன்னின்று செயற்படுதையிட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்
.இத்திட்டமானது மிக நீண்டகாலமாக தாமதப்பட்டு வந்ததையிட்டு மனம் வருந்துவதாகவும் அதேநேரம் அது மேலும் தாமதமாவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியானது முற்று முழுதாக தொழில்நுட்ப வல்லுனர்களின் கைகளில் தங்கியிருப்பதால் இந்த பொறியியல் பீடம் அமைவதையும் இப்பீடமானது திறமையான பொறியியலாளர்களை உருவாக்கும் பட்சத்தில் எமது பிராந்திய அபிவிருத்திக்கும் மக்களின் உயர்தர வாழ்வாதாரத்திற்கும் உதவிபுரியும்.
பல்கலைக்கழகங்களானது கல்வியறிவுடைய மக்களை மட்டும் உருவாக்காமல் முழுநாட்டின் அபிவிருத்திக்கும் உதவி புரிகின்றன. இக்கருத்தியலின் அடிப்படையில் பொறியியல் பீட உருவாக்கமானது வடக்கு மக்களின் புத்துருவாக்கத்திற்கு நிச்சயமாக உதவுமெனவும் நாட்டை புதிய எதிர்காலத்திற்கும் தொழில் நுட்ப அறிவு நிரம்பிய எதிர்காலத்திற்கும் இட்டுச் செல்லும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இப்பீடத்தை உருவாக்கும் அதேநேரத்தில் அதன் பாடநெறிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக இலத்திரனியல் இயந்திரப் பொறியியல் விமானப் பொறியியல் மற்றும் உயிரியல் மருத்துவப் பொறியியல் போன்றவை உலகளாவிய ரீதியில் பிரபல்யமானவை. அத்துடன் இவை இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகத்தினாலும் உள்வாங்கப்படாமையால் யாழ் பல்கலைக்கழகம் இதன் முன்னோடியாக திகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் எனது நன்றிகளை வடமாகாண இலங்கை பொறியியலாளர் சங்கத்திற்கு தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை என்னாலான அனைத்து உதவிகளையும் இப்பீடத்தினை குறுகியகால அவகாசத்தில் உருவாக்குவதற்கு வழங்க விரும்புவதாகவும் இம்முயற்சியினை பாராட்டும் அதேவேளை இப்பீடத்தின் விரைவான உருவாக்கத்தில் பங்கெடுப்பதனால் நாட்டின் குறிக்கோளாகிய அபிவிருத்தியினை எட்டுவதற்கு தனது வாழ்த்துக்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’