வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது

விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமத்தில் வசித்து வந்த நிலையில் பின்னர் உறவினர்களுடன் செட்டிகுளத்தில் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டதாக செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை பெற்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த யுவதி முல்லைத்தீவைச் சேர்ந்தவரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் மீதான மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவொன்று தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’