வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் காலத்திற்கேற்ற உற்பத்திகள் 2010 பயிற்சி செயலமர்வு யாழில் ஆரம்பம்.

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் புதிய வடிவமைப்பு எண்ணக்கருக்களை இலகுதொழில்நுட்ப வாயிலாகவும் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் நோக்குடனும் வடமாகாணத்தில் நடாத்தப்படும் கோட்பாடுகள் உள்ளடக்கிய பயிற்சிச் செயலமர்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது புகைப்படம் இணைப்பு 

.யாழ். செயலகத்தில் இன்று ஆரம்பமான இப்பயிற்சி செயலமர்வானது யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களின் வரவேற்புரையுடனும் தேசிய வடிவமைப்பு நிலையத் தலைவர் மார்ஷல் பணிப்பாளர் விஜேகோன் ஆகியோரின் விளக்க உரைகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்புரையுடனும் தொடர்ந்து இடம்பெற்றது.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு;தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் பனை அபிவிருத்திச் சபை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை தேசிய அருங்கலைகள் பேரவை ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் இப்பயிற்சி நெறியில் யாழ்.மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பன்னிரண்டு பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து முப்பத்தொரு கிராமங்களில் ஆறுவிதமான கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் கைவினைத்திறன் கலைஞர்களின் படைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்களின் ஆக்கங்கள் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் உயர் டிப்ளோமா பாடநெறியைப் பயிலும் மாணவ மாணவிகளின் புத்தாக்கங்கள் 2010இல் தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் உருவாக்கப்பட்ட புதிய வடிவமைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய காலத்திற்கேற்ற உற்பத்திகள் 2010 கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் அவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்நடவடிக்கை மூலம் கைவினைத்திறன் கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் உரிய தகவல்களையும் அறிவையும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தொழிலற்றவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் நோக்கமும் நிறைவேற்றப்படும் என்பது முக்கிய விடயமாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இக்கருத்திட்டத்தின் மூலம் 1250 கைவினைத்திறன் கலைஞர்கள் நேரடியாக பயனடையவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’