வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

யாழ் கல்விக் கண்காட்சி 2010 அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்!

ரண்டாவது தடவையாக யாழ் கல்விக் கண்காட்சி இன்றைய தினம் (18) யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது புகைப்படம் இணைப்பு .


இக் கண்காட்சியை பிக்கோ அமைப்பு சார்பாக எமில் குணசேகர ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த வருடம் இக்கண்காட்சி இதே மண்டபத்தில் முதற் தடவையாக அப்போதைய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த வருடம் எமது கல்விச் சமூகத்தினரின் பலத்த வேண்டுகோளுக்கிணங்க திரு எமில் குணசேகர பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இக்கண்காட்சியை முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடத்தினார் என்றும் இன்று இரண்டாவது தடவையாக இக்கண்காட்சியை அவர் நடத்துவதையிட்டு தான் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அடுத்த வேளையைப் பற்றிய அச்சத்துடன் நாம் வாழ்ந்திருந்த காலம் எம்மில் இருந்து நீங்கி தற்போது அமைதிமிக்கதொரு சூழல் உருவாகி இருப்பதை இங்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இக்கால கட்டத்துள் எமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தி எமது வாழ்க்கையை ஒளிமயமானதாகக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நூல் பிரசுர நிறுவனங்கள் பங்குபெறும் இக்கண்காட்சியானது பல்வேறு பெறுமதிமிக்க நூல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’