வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 செப்டம்பர், 2010

பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைபர் பிராந்தியத்தின் லக்கி மார்வட் நகரிலுள்ள பொலிஸ் நிலையமொன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காரில் வந்த தற்கொலைதாரி பொலிஸ் நிலையத்தினுள் காரை செலுத்தியுள்ளார் என்று பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 11 பொலிஸார், 4 பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் அடங்குவர். இச்சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் லாகூர் மற்றும் குவேட்டா நகரங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கின்போது தணிந்திருந்த வன்முறைகள் அத்தாக்குதல்களின் மூலம் மீண்டும் தீவிரமாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’