வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 20 வருடங்களை கடந்த 174 பேருக்காக பிராத்தனை

1990ஆம் ஆண்டு போர்ச் சூழலின் போது உயிர் அபாயம் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தங்கியிருந்த குடும்பங்களின் 174 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனபோதிலும் இவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இச்சம்பவத்தின் நினைவாக இருபது ஆண்டு நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
.1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி 158 பேரும் 23 ஆம் திகதி 16 பேரும் சீருடையினரால் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதாக கருதப்படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்; மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த வாலிபர்களின் பெற்றோர் ஏக்கப் பெருமூச்சுடன் காணப்படுகின்றனர்.
இருந்தபோதும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என நினைத்து ஆத்ம சாந்திக்கான கிரியைகளில் ஈடுபட்டனர். ஆன போதிலும் தமது மக்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கலாம் என நம்புகின்ற பெற்றோர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்வு இன்று இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’