வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தென்னிலங்கைப் பெரும்பான்மை சமூகம் அளப்பரிய உதவிகளை மேற்கொள்ள விரைந்து வரவேண்டும் - ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர்..!

யுத்த வன்முறை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள எமது மாணவ சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தென்னிலங்கைப் பெரும்பான்மை சமூகம் அளப்பரிய உதவிகளை மேற்கொள்ள விரைந்து வரவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்  புகைப்படம் இணைப்பு
. வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இலங்கைச் சாரணிய சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட நூல்நிலையத் திறப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு பி.சிவாராஜா தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் விஷேட விருந்தினராகக் கலந்து பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாராலும் அபகரிக்க முடியாத எமது அழியாச் சொத்தாகிய கல்விச் செல்வம் நாட்டில் நீடித்த கொடூர யுத்தம் வன்முறை காரணமாக வீழ்ச்சியடைந்ததும் யாவரும் அறிந்த விடயமாகும். யுத்தம் காரணமாக தென்னிலங்கை மக்களுக்கும் வடகிழக்கு மக்களுக்கும் இருந்து வந்த ஐக்கியம் ஒற்றுமை சகோதரத்துவம் என சகலவற்றிலும் தளர்வு ஏற்பட்டது. ஆனால் அர்த்தமற்ற விவேகமற்ற யுத்தம் எமக்கு அழிவையும் அங்க இழப்பையும் அவலத்தையும் விட்டுச் சென்றுள்ளது. இன்று பெரும்பான்மை இனச் சகோதரர்கள் எமது வடக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு குறிப்பாக பின் தங்கிய பிரதேசமான வடமராட்சி கிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்நூல் நிலையத்தையும் கணனி வசதியையும் இலங்கைப் பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் செல்வி ஹந்தி பெனாண்டோ அவர்களும் தென்னிலங்கை சாரணர்களும் ஏற்படுத்தித் தந்துள்ளனர். இதன்மூலம் இன மொழி மத பேதமற்ற மாணவ சகோதரத்துவம் வளர்வதற்கான நம்பிக்கை விதை தூவப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைச் பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் செல்வி ஹந்தி பெனாண்டோ மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் திரு வி.ரி.செல்வரட்ணம் மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு கே.பொன்னையா வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு எஸ்.கணேசமூர்த்தி மற்றும் சமயப் பெரியவர்களும் கம்பஹா களுத்துறை கொழும்பு தம்புள்ள அனுராதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்த நூற்றிற்கும் மேற்பட்ட பெண் சாரணியர்களும் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’