.முதற்கட்டமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சார்சட்டா மாவட்ட வைத்தியசாலையில் வைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
சார்சட்டா மாநிலத்திலுள்ள 1.4 மில்லியன் மக்களில் 900,000 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சார்சட்டா மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக 65 ஆயிரம் பேர் வெள்ளம் காரணமாக பலவித தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலங்கை மருத்துவக் குழு அளப்பரிய சேவை ஆற்றி வருகிறது.
அங்குள்ள அநேகமான மக்கள் வாந்திபேதி, மலேரியா போன்ற தோற்றுக்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஏயார் சீப் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி சார்சட்டா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, வைத்திய குழுவினரின் பணிகளைப் பார்வையிட்டார். .





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’