கண்டி ஸ்ரீ தலதா மாளிகைப் பெரஹராவின் இறுதிநாளான இன்று பெரஹராவைப் பார்வையிட கட்டுக்கடங்கா சனக் கூட்டம் வந்து சேர்ந்துள்ளது
.பல இலட்சம் மக்கள் ஒரே நேரத்தில் கண்டி நகர வீதிகளில் வந்து குவிந்திருந்திருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வாகனங்களையும் பொது மக்களையும் கட்டுப் படுத்துவதில் பெலிசார் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவதாகவும், இன்று 24ஆம் திகதி போயா விடுமுறையுடன் இறுதிப் பெரஹராவாகவும் இருப்பதனால் சன நெறிசல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சம்பிரதாய முறைப்படி இறுதிப் பெரஹராவை நேரடியாகப் பார்வையிடவுள்ளார்.
கண்டி நகரானது விழாக் கோலம் பூண்டுள்ளதையும் ஆங்காங்கே கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருவதையும் காண முடிந்தது. சிட்டி டிரேட் சென்டர் மேல் மாடியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதை விட கண்டி நகருக்கு கொழும்புப் பக்கமிருந்துவரும் போது எதிர்கொள்ளும் நுழைவாயலான கெட்டம்பே மைதானத்தில் ஒரு களியாட்டமும், மாத்தளைப் பக்கமாக இருந்து வரும்போது போது எதிர்கொள்ளும் நுழையும் வாயிலான கட்டுகாஸ்தோட்டை ஸ்ரீ ராகுலா மைதானத்தில் ஒரு களியாட்டமும் நடைபெறுகின்றன. இதைவிட நகர வீதிகள் எங்கும் மின் அலங்காரமும் பௌத்த கொடிகளும் பரவலாக உள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’