இலங்கையிலுள்ள 15 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நியாயபூர்வமான அதிகாரப்பகிர்வை நாடுவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர். இது தொடர்பாக ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் பேச்சுவார்த்தையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவின் பஞ்சாயத்து முறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜனசபா முறைமையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.வருட முடிவில் புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆர்வமாகவிருப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
புதிய முறைமையின் கீழ் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு நீதியான பிரதிநிதித்துவத்தை இந்திய வம்சாவளி மக்களின் சர்வதேச அமைப்பும் (கோபியோவும்) இலங்கை,இந்திய சமுதாயப்பேரவையை நாடிநிற்பதாக கோபியோவின் தலைவர் பி.பி.தேவராஜ் கூறியுள்ளார். பிரதேசசபை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சில அதிகாரங்கள் கிராம மட்டத்திலான ஜனசபைக்கு மாற்றப்படும் ஏற்பாடுகளை புதிய முறைமை கொண்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் போதியளவு பிரதிநிதித்துவம் இல்லாததால் இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் குரல் இப்போது ஒலிப்பதில்லை. அதனால் அவர்கள் பிரஜைகள் என்ற முறையில் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையுள்ளது என்று தேவராஜ் கூறியுள்ளார்.
தற்போதைய முறைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். தற்போதைய முறைமையில் பெருந்தோட்டத்துறையானது உள்ளூர் நிர்வாக அரசியல் முறைமையின் எல்லைக்குள் உள்ளடக்கப்படாமல் காணப்படுகிறது. பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் தோட்டக்கம்பனிகளினால் நிர்வகிக்கப்படுகிறார்கள். பிரதேசசபைகள் மற்றும் ஏனைய கிராம நிறுவனங்கள் போன்றவற்றில் அவர்கள் பங்காளிகளாக இல்லை. உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் நலன்புரி நடவடிக்கைகள் சுயாதீனமாகவே அவர்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இல்லை. பெருந்தோட்டத்துறை அமைச்சின் கீழ் தோட்டங்கள் தனியாக உள்வாங்கப்பட்டுள்ளன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’