பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது பட்டப்படிப்புகளை மேற்கொண்டுவரும் மாணவர்கள் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார் புகைப்படம் இணைப்பு
.யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (30) நடைபெற்ற வன்னிப் பகுதி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பரமேஸ்வராக் கல்லூரி நிறுவனரான சேர்.பொன். இராமநாதன் அவர்கள் சிறந்த கல்விமான் என்பது மட்டுமல்ல அவர் கல்விக்காக ஆற்றிய பங்கு பணிகள் அளப்பரியது. அவருடைய சிறப்பான கல்விப் பணியின் மூலமாகவே இன்று பெருவிருட்சமாக யாழ் பல்கலைக்கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென சேர்.பொன். இராமநாதன் எடுத்த முன்முயற்சிக்கு அப்போதைய அரசியல் தலைமைகள் மறுப்புத் தெரிவித்த போதிலும் அவரது விடாமுயற்சியின் பலனாக இன்று யாழ்ப்பாணத்தின் மணி மகுடமாக இந்த பல்கலைக்கழகம் விளங்குகின்றது.
எனவே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அவர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து முல்லைத்தீவு கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு நலன்புரி நிலையங்களிலிருந்து மீண்டும் தமது மேற்படிப்பைத் தொடரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஒரு தொகை காசோலையை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’