வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி; அரியநேத்திரன் எம்.பி

மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது
.பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பறிப்பு முதல், மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த படையினரும் ஏனையவர்களும் முன்வர வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்களின் காரியங்களை நிறைவேற்றவும் அச்சமடைந்துமுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’