சமுர்த்தி அதிகாரியொருவரை தான் மரத்தில் கட்டியதாக அந்த அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் தனது பிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் மேர்வில் சில்வாவினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி நடவடிக்கை சரியானது என்று வலியுறுத்தியும் அவருக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இன்று தெமட்டகொடை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் மேற்படி தகவலை பொதுமக்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், குறித்த முறைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில் எந்நேரமும் தனது பதவியைத் துறக்கத் தயார் என்று கூறினார்.
இதேவேளை, மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, மரத்தில் கட்டி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’