வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.

ம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.


ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதி அங்கு விஜயம் செய்தபோது பிரதி அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் தயசிறி திசேரா ஆகியோர் உட்பட துறைமுக அதிகார சபையினதும் அதன் நிர்மாணப் பணிகளதும் உயர் அதிகாரிகளும் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி நீர் நிரப்பும் வரலாற்று முக்கியமான நிகழ்வை பார்வையிட பொதுமக்களுக்கு முழு அனுமதி அளிக்கப்பட உள்ளது. துறைமுகம் அமைப்பதற்காக 17 மீற்றர் ஆழத்திற்கு வான் தோண்டப்பட்டுள்ளது. மக்களுக்கு நீரில் இறங்கி குதூகலிக்கவும் அனுமதி வழங்க உள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அன்றையதினம் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் காலை 4 மணி முதல் துறைமுகத்திற்கு வர மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
முன்னதாக நிர்மாணப் பணிகளைப் பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த பத்தாம் திகதியுடன் முடிவடைந்ததாக துறைமுக அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். துறைமுக நிர்மாணப் பணிகளைப் பொதுமக்கள் பார்வையிட நேற்று பதினோராம் திகதி வரை அனுமதிப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யவேண்டி இருந்ததாலும் மக்கள் வருகையைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாலும் ஒருநாள் முன்பதாகவே அத்திகதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி பிரதான வைபவம் இடம்பெறும்போது பொதுமக்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பங்குகொள்ளமுடியும் என்பது விசேட அம்சமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’