ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சமாதான முயற்சிகளில் இவர்கள் முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் என்பதால் சமாதான முயற்சிகள் குறித்த நடுநிலையான அவதானிப்பை பெற்றுக்கொள்வதற்கு இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
"இன்றைய நிலையில் ஐ.தே.கவை தாக்குவதற்கும் சமாதான முயற்சிகளை சிறுமைப்படுத்துவதற்குமே இந்த ஆணைக்குழு பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.இதைவிட அக்காலத்தில் சமாதான முயற்சிகளில் தீவிரமாக செயற்பட்டவர்களான மேற்படி அங்கத்தவர்களை ஆணைக்குழு அழைத்து விசாரிக்க வேண்டும் என ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’