யாழ். குடாநாட்டிற்கான மணல் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று பிற்பகல் வல்லிபுரம் பிரதேசத்திலுள்ள வடமராட்சி மணல் ஏற்றும் வாகன உரிமையாளர் சங்க பணிமனைக்குச் சென்ற அமைச்சரவர்கள் அதன் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்தார். இதன்போது சங்க உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில் மணல் ஏற்றும் இடத்தில் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த்தாங்கியில் உரிய வகையில் குடிநீரை விநியோகிக்குமாறும் வல்லிபுரம் குறுக்கட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை திருத்தம் செய்து பேணிவருமாறும் பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்சமயம் யாழ். குடாநாட்டில் பெருமளவு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மணலின் தேவையினை கருத்திற்கொண்டு இயலுமான உழைப்பினை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’