வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சி மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான முயற்சியான்மை கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிக்கு வங்கிகள் அனைத்தும் இலகு கடனை இலகு முறையில் வழங்கி அவர்களின் ஒளிமயமான வாழ்கைக்கு உதவ முன்வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (16) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான முயற்சியான்மை கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வில் தலைமையுரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் வன்னி மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் திரும்ப வந்திருக்கின்றனர். இம்மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் அனைத்தும் இலகு கடனை இலகு முறையில் வழங்கி அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தொழில் முயற்சியாளர்கள் உங்களது தொழில் முயற்சிக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்களை தேர்ந்தெடுக்கும் போது மூலப்பொருள் சந்தை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதற்கு எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண மத்திய வங்கி முகாமையாளர் சிறிதரன் அரசாங்க அதிபர் வங்கி முகாமையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் தவநாதன் உட்பட பெருமளவிலான தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’