வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அலைகளின் ஓசை எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் எதிரொலியாகும் - ஜனாதிபதி

யங்கரவாதத்திலிருந்து நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. இதனை சிறந்த முறையில் எதிரொலிக்கச் செய்ய வேண்டுமாயின் சுதந்திரமானதொரு பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த வேண்டும். அம்பாந்தோடை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி கடல் நீர் துறைமுகத்துக்குள் உள்வாங்கும் இந்த ஓசை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் எதிரொலியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பந்தோட்டை, மாகம்புறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு நீர் நிரப்பும் வைபவம் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
"நூற்றுக்கணக்காண ஆண்டுகளின் பின்னர் நாடு பாரிய பொருளாதார வளர்ச்சியினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்காக நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். இருப்பினும் அவற்றை தற்போது முறியடித்துக்கொண்டு வெற்றி கண்டுள்ளோம்.
எமது இந்த வெற்றியினை பார்த்து எரிச்சல்படுபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஏழ்மைத்தன்மையைப் பயன்படுத்திக்கொண்டே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த ஏழ்மைத்தன்மையை ஒழிக்க அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.
சாவால்களை எதிர்நோக்கி அதில் வெற்றி காண வேண்டும். அதுவே மனித இனத்தின் வெற்றியாகும். நாமும் அவ்வாறே செய்துள்ளோம். ஏழ்மையை விரும்புபவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றி அவர்களை பொருளாதார வளர்ச்சியினை நோக்கிக் கொண்டுசென்றுக்கொண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருட காலத்திலான பொருளாதார அபிவிருத்தியினை நோக்கும் பட்சத்தில் எமது வெற்றி குறித்து புலப்படும்.
இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறாக எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச விமான நிலையம், நெடுஞ்சாலைகள், கைத்தொழிற் புரட்சிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக எதிர்கால சந்ததியினருக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
இதனால் எமது எதிர்கால சந்ததியானது, வெளிநாடுகளை நம்பி வாழ வேண்டிய அவசியம் ஏற்படாது. வெளிநாட்டு உற்பத்திகளுக்கு பதிலாக "மேட் இன் ஸ்ரீலங்கா" என்று பொறிக்கப்பட்ட உற்பத்திகள் புழக்கத்துக்கு வரும்.
அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கி முன்னெடுத்து வருகின்றோம். இதன்மூலம் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை திகழும் என்பதை உறுதியாக கூறுகின்றேன்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’