வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஆகஸ்ட், 2010

முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலிப்பூஜை நடந்தது

முன்னேஸ்வரம் காளி கோவிலில் எதிர்ப்புகளையும் மீறி இன்று மிருக பலிப்பூஜை நடைபெற்றது. சுமார் 300 ஆடுகளும் 700 கோழிகளும் அங்கு பலியிடப்பட்டன
.இம்மிருக பலியை தடுக்குமாறு தேசிய பிக்குகள் சம்மேளனம் பொலிஸாரை வலியுறுத்தியிருந்தது. இன்று காலை இப் பலிப் பூஜையை தடுப்பதற்காக பிக்குகள் பலர் முன்னேஸ்வரம் காளி கோவிலுக்குள் நுழைய முற்பட்டபோது பதற்றநிலை தோன்றியது. எனினும் அவர்கள் பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.
பிக்குகள் சம்மேளனம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையும் சத்தியாக்கிரகத்தையும் தடுப்பதற்கு சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் ஏ. கஹந்தகமவிடமிருந்து நீதிமன்ற உத்தரவொன்றை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் மிருக பலிப்பூஜை நடைபெற்றது. எனினும், வழக்கம் போன்று திறந்த இடத்தில் அல்லாமல், மறைவான இடமொன்றிலேயே மிருகங்கள் இன்று பலிகொடுக்கப்பட்டன.
"பகிரங்கமாக மிருகங்களை பலிகொடுப்பதற்கு எதிராகவே பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மறைவான இடத்தில் மிருக பலிப் பூஜை இடம்பெற்றது" என சிலாபம் பொலிஸார் "தமிழ் மிரருக்குத்" தெரிவித்தனர்.
இதேவேளை, மிருக பலி கொடுப்பது இலங்கை சட்டத்தின்படி தடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் பொலிஸார் மிருக பலியை தடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி தாம் மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தை தடுக்கும் உத்தரவைப் பெற்றுள்ளனர் எனவம் பிக்குகள் சம்மேளனம் கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’