வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

போர்நிறுத்த முயற்சி குறித்து கே.பி. விபரிக்க வேண்டும்: கருணாநிதி

லங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வருட முற்பகுதியில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதை ம.தி.மு.க. தலைவர் வைகோ குழப்பினார் என்பது குறித்த விபரங்களை குமரன் பத்மநாதன் தெரிவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்துவிடும் எனவும், அ.தி.மு.க. – பிஜே.பி.கூட்டணி ஆட்சி அமையும்போது புலிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும் எனவும் கூறி, உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கு வைகோ தடையாக இருந்தார் என டெய்லி மிரருக்குக்கு வழங்கிய செவ்வியில் கே.பி. கூறியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்துடன் புலிகள் அமைப்பு பேச விரும்புகிறது என்ற தகவலை வைகோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) சார்பில் போட்டியிட்ட கே.மகேந்திரன் தெரிவித்ததாகவும் கே.பி. கூறினார். ஆனால் இத்தகவல்களை மகேந்திரன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கே.பி. விபரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’