வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஆகஸ்ட், 2010

நீர்வேலி கூட்டுறவுக் கைத்தொழில் நிலையம் புனரமைப்புச் செய்யப்படுகிறது

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நீர்வேலி காமாட்சி அம்மாள் கூட்டுறவுக் கைத்தொழில்கள் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பழைமை வாய்ந்த கைத்தொழில் நிலையமான இக்கூட்டுறவுக் கைத்தொழில் நிலையம் கடந்தகால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை மீளக் கட்டியெழுப்பி இயந்திராதிகளை வழங்கி நவீனமயப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிர்வாகத் தரப்பினருக்கு உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் பல்துறை சார்ந்த கைத்தொழில்துறைத் தயாரிப்புக்களை குடாநாட்டில் பெருக்குவதும் பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நோக்கமாகும்.

இதன் பிரகாரம் மேற்படி கைத்தொழில் நிலையத்தை செப்பனிடும் பணிக்காக முதற்கட்டமாக ஒரு தொகை நிதியை மகேஸ்வரி மன்றம் ஊடாக அமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளதுடன் அமைச்சின் கீழ் புதிய இயந்திராதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் உள்ளார்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’