தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வட மாகாணங்களில் நிலவி வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தில் இடம் பெற்றது
.இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே மேற்படி நேர்முகத்தேர்வு நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு, உரிய அதிகாரிகள் மூலம் இது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 250 பேர் வரை நேர்முகத் தேர்வில் பங்குபற்றியுள்ளதாகவும் பின் மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்துத் தம்மிடம் இளைஞர்கள் முறையிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’