குற்றப் புலனாய்வுப் பிரிவைச் (சி.ஐ.டி) சேர்ந்த புலனாய்வு உத்தியோகஸ்தர்களாக தம்மை காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி பணம் கறந்து வந்த  இருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்வோம் என மிரட்டி, வர்த்தகர்களிடமிருந்து பணம், நகை என்பனவற்றை இவர்கள் பெற்று வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இச்சந்தேக நபர்கள் கடவத்தை மற்றும் மருதானையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’