வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மெக்ஸிகோவில் பார ஊர்தியிலிருந்து இலங்கையர்கள் மீட்பு


லங்கை மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 76 குடியேற்றவாசிகள் மெக்ஸிகோ நாட்டில் கைவிடப்பட்டிருந்த பார ஊர்தியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

சியாபஸ் மாநிலத்தில் வில்லாபுளோர்ஸ் - ஒகோஸோகௌட்லா நெடுஞ்சாலையில் அவர்கள் காணப்பட்டதாக மெக்ஸிகோ சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். வாகனத்தில் 3 மீற்றர் அகலமும் 8 மீற்றர் நீளமும் கொண்ட இடமொன்றில் உடலில் நீர் பற்றாக்குறைக்கு உள்ளான நிலையில் அவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மெக்ஸிகோவில் சட்டபூர்வமாக தங்கியிருப்பதற்கான எந்த ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. தாம் இலங்கை, கௌத்தமாலா, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்படி குடியேற்ற வாசிகளில் எத்தனை பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற விபரத்தை மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. அவர்கள் அனைவரும் தேசிய குடிவரவு நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதற்கு சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளை அந்த நிலையில் விட்டுச சென்றவர் யார் என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை மெக்ஸிகோ சட்டமா அதிபர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’