பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரி மீது பாதணி வீச்சு இடம்பெற்றுள்ளது.
பேர்மிங்ஹாம் நகரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சிக் கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்காக சர்தாரி வந்தபோது அவர்மீது ஒருவர் சப்பாத்தை வீசியுள்ளார் அந்நபரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அக்கட்சியின் தவிசாளரான சர்தாரியின் மகன் பிலாவல் இக்கூட்டத்தில் உரையாற்றவிருந்தார். எனினும் பின்னர் அது இரத்துச் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என பிரித்தானிய பிரதமர் தனது இந்திய விஜயத்தின்போது கூறியமை மற்றும் பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு ஆகியன காரணமாக பாகிஸ்தான் ஜனாதிபதி பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கக்கூடாது என சிலர் கூறுகின்னறனர்.
எனினும் இக்கருத்தை ஜனாதிபதி சர்தாரி நிராகரித்துள்ளார். "இக்கூட்டங்கள் பல மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். இவ்விஜயத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு குறித்து உலகின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது" என சர்தாரி கூறியுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’