கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உவைஸ் மொஹமட் இம்தியாஸ் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேயருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, கடந்த மாதத்துடன் முடிவடைந்த போதிலும் மொஹமட் இம்தியாஸ் இன்னும் வெளியேறாமல் இருப்பதாக மாநகர சபை விசேட ஆணையாளர் கொழும்பு மாநகர சபை ஒமர் காமில் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவதற்காக முன்னாள் மேயர் இம்தியாஸ் 3 மாதகால அவகாசம் கோரியிருந்ததார். இதற்கான அவகாசம் கடந்த 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் மேற்படி உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தான் ஜனாதிபதியிடமிருந்து விசேட அனுமதி பெற்றிருப்பதாக உவைஸ் மொஹமட் இம்தியாஸ் டெய்லிமிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’