களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 30 இலட்சம் ரூபாவை சுமார் 20 நாட்களுக்கு முன்னர் கொள்ளையிட்ட நபரை களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்து விஷேட அதிரடிப் படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
நாவற்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பணம், தங்க நகை, மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. ஆர். மானவடு தெரிவித்தார்.
கடந்த மாதம் 15ஆம் திகதி களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான 30 இலட்சம் ரூபா பணத்தை மற்றொரு வங்கியிலிருந்து எடுத்து வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’