வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கரைச்சி பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான சந்திப்பு!

ரைச்சி பிரதேச கூட்டுறவாளர்களுடனான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நேற்று (20) மாலை கூட்டுறவு சங்க தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது  புகைப்படம் இணைப்பு
. இச்சந்திப்பில் கூட்டுறவுச் சங்கத் தலைவர் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இம்மகஜரில் குறைந்த வட்டி வீதத்திலான கடன் தொகையை (ஒரு கோடி வரையில்) தொழில் முதலீடாக பெற்றுத் தரவேண்டுமெனவும் எமது சங்கத்திடமிருந்த 6 பாரவூர்திகளையும் மீளவும் பெற்றுத் தருவதற்கு உதவி புரிய வேண்டுமெனவும் மக்களுக்கான வீட்டு வசதியில் கூட்டுறவு ஊழியர்கள் புறம்தள்ளப்படும் நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் நிவாரண ஊதிய கொடுப்பனவுகள் தமக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் தற்போது ச.தொ.ச நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட தமது சங்க கடைகள் இரண்டிற்குப் பதிலாக வேறு இடத்திலாவது கடைகளை பெற உதவ வேண்டுமெனவும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம் அமைக்க உதவ வேண்டுமெனவும் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலளித்து உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் கிளிநொச்சி மாவட்ட அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை தாம் உரிய வகையில் அது சார்ந்த அமைச்சின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளதாகவும் விசேடமாக கரைச்சி பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்கோளுக்கு அமைவாக ஒரு கோடி அதற்கு மேற்பட்ட தொகையினை குறைந்த வட்டி வீதத்தில் பெறத் தக்க வவழியினை விரைவாக ஏற்படுத்தித் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வீட்டுத் திட்ட வசதியில் கூட்டுறவு ஊழியர்களுக்கு இருந்த குழப்ப நிலைக்கு தீர்வு காணும் முகமாக உடனடியாகவே கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி குழப்ப நிலைக்கான தீர்வையும் உடன் பெற்றுக் கொடுத்தார். இதன்படி கூட்டுறவுச் சங்க ஊழியர்களும் வீட்டு வசதிகளை பெறமுடியும் என்ற செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.
இதைவிட கரைச்சி கூட்டுறவுச் சங்கத்திற்கு உரியதான ஓர் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை அவர்கள் உரிய திட்ட முன்மொழிவை அது தொடர்பாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய காலத்தில் ஏற்படுத்திக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச கூட்டுறவு சங்கத் தலைவர் செயலாளர் உட்பட அதன் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’