வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஆபாச இணையத்தளங்களின் பட்டியல் நீதிமன்றுக்கு

செல்லிடத் தொலைபேசியூடான ஆபாச இணையத்தளங்களை தடை செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பத்தரமுல்லையிலுள்ள நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஆபாச இணையத்தளங்கள் அடங்கிய பட்டியலொன்றை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு சமர்ப்பித்துள்ளது
.பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு வழக்கொன்றை தாக்கல் செய்ததையடுத்து, செல்லிடத் தொலைபேசியூடான ஆபாச இணையத்தளங்களை தடை செய்யுமாறு நேற்று புதன்கிழமை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்டவிடம் தொடர்பு இணையத்தளம் கொண்டு கேட்டபோது, கையடக்கத் தொலைபேசியூடான ஆபாச இணையத்தளங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
எனினும், ஆபாச இணையத்தளங்களை விழிப்பூட்டும் நடவடிக்கை காரணமாக இணையத்தளம் இயங்கும் வேகம் பாதிப்படையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’