கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (15) கனகபுரம் மைதானத்தில்; மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திரு தவேந்திரன தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.
அங்கு பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய சந்திரகுமார் அவர்கள் இந்த மாவட்டத்திலிருந்து தேசிய இளைஞர் சேவை மன்ற போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்ட அணிக்கு விளையாட்டு உடைகளை தான் வழங்குவதாகத் தெரிவித்தார்.
அத்தோடு தேசிய விளையாட்டு போட்டி கண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வடமாகாணத்தில் இருந்து கிளிநொச்சி சார்பாக 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றும் செல்வி. விமலாதேவிக்கும் கராட்டி போட்டி பெண்கள் பிரிவில் பங்குபற்றும் செல்வி. செல்விகா ஆகியோருக்கு ஊக்குவிப்புப்பாக தலா 5000 ரூபாவினை சந்திரகுமார் அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து வழங்கினார்.
மிக நீண்ட காலத்திற்குப் பின் நடைபெற்ற இப்போட்டியில் பங்குபற்றிய கரைச்சி பிரதேச சபை கண்டாவளை பிரதேச சபை பளை பிரதேச சபை பூநகரி பிரதேச சபை ஆகியவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் தவநாதன் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’