வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

ன மத சாதி வேறுபாடுகளுக்கப்பால் சகலரும் ஐக்கியப்பட்டு வாழும் ஒரு சூழலை நோக்கி முன்செல்ல வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (13) வேலணையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு தலைமைதாங்கி உரைநிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து தமிழ் பேசும் மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கான சுபீட்சமான வாழ்வை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், இக் குழுவின் தலைமைப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்துள்ளதால் இப்பிரதேச மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலமே சிறந்ததொரு எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியுமென உதயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முப்பது ஆண்டு காலமாக அழிவுப்பாதையில் சென்ற தமிழ் மக்கள், தற்போது ஜனநாயக ரீதியான நடைமுறைகளுக்கு ஊடாக அனைவருடனும் ஐக்கியப்பட்டு வாழக்கூடிய ஒரு சூழலை நோக்கிச் செல்ல முற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சரியான திசைவழிநோக்கி தமிழ் பேசும் மக்களை அழைத்துச் செல்லக்கூடிய ஜனநாயகத் தமிழ் தலைமைகளை இனங்கண்டு, அவர்கள் பின்னால் அணிதிரள்வதன் மூலமே எமது மண்ணில் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியுமென தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் இன மத சாதி வேறுபாடுகளுக்கப்பால் சகலரும் ஐக்கியப்பட்டு வாழும் ஒரு சூழலை நோக்கி முன்செல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு பயன்படக்கூடிய விதத்தில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஒத்தாசையுடன் சுயசார்பு நிலையை அடைவதற்கான தொழில் முயற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமென உதயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் வேலணைப் பிரதேச செயலர் எம். நந்நகோபாலன் ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச பொறுப்பாளர் சிவராசா (போல்) திணைக்களத் தலைவர்கள் கிராமசேவகர்கள் அரச ஊழியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’