கொழும்பு மாநகரசபை கிரீன் பாத்தில் இரவு நேர சந்தையை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர் ஒமர் காமில் இது குறித்து தெரிவிக்கையில்,'யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்பகரமான சூழலை உருவாக்கும் முகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர்களை களிப்பூட்டும் வகையில் இரவு நேர பசார் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 40 கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு விடுதி, சிறுவர்களுக்கான விளையாட்டு ஒழுங்குகள், வாகன தரிப்பிடம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’