வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் "குப்பைகளை கொட்டும்' இடமாக இருக்காது : ஜனாதிபதி

மது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் "குப்பைகளை கொட்டும்' இடமாக இருக்காது. மாறாக "மேட் இன் ஸ்ரீலங்கா'' என்ற நாமத்தை உலகம் பூராவும் பறைசாற்றும் உற்பத்திகளை உருவாக்கும் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதே எமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
.பொருளாதார அபிவிருத்தியில் முன்னேறி வரும் வேளையில் அதனை சகிக்க முடியாமல் பலர் பொய்யான விமர்சனங்களை முன் வைத்து எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அம்பாந்தோட்டை மாகம்புறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுளள் துறைமுகத்துக்கு நீர் நிரப்பும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
பயங்கரவாதத்திலிருந்து நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. இதனை சிறந்த முறையில் எதிரொலிக்கச் செய்ய வேண்டுமாயின் சுதந்திரமான பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி கடல் நீர் உள்வாங்கும் இந்த ஓடையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் எதிரொலியாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பின்னர் நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இத்துறைமுகத்தை அமைக்கும் பணியை நாம் ஆரம்பித்த போது பலர் விமர்சித்தனர், சேறு பூசினர், நீதிமன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்யவும் தயாரானார்கள். இது போன்ற பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து அவற்றை முறியடித்து இன்று வெற்றி கண்டுள்ளோம்.
எனவே அன்று எதிர்த்தவர்களை இன்றைய வெற்றி தொடர்பிலும் திரும்பிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். இன்று எமது வெற்றியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாதவர்கள் ஏழ்மைத் தன்மையை பயன்படுத்தி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இவ்வாறு அரசியல் நடத்துபவர்கள் ஒரு போதும் ஏழ்மைத்தன்மையை இல்லாதொழிக்க முன்வர மாட்டார்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அதுவே மனித இனத்தின் வெற்றியாகும். நாம் அதனையே செய்துள்ளோம்.
ஏழ்மையை விரும்புபவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றி அவர்களை பொருளாதார வளர்ச்சியினை நோக்கிக் கொண்டு செல்கிறோம். கடந்த ஐந்து வருட கால பொருளாதார அபிவிருத்தியயை நோக்குவோமாயின் இது வெளிப்படும். இத் துறைமுகம் அமைக்கப்பட்டதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளது.
இவ்வாறு எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச விமான நிலையங்கள் நெடுஞ்சாலைகள், கைத் தொழிற் புரட்சிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் காரணமாக எதிர்கால சந்ததியினருக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
எனவே எமது எதிர்கால சந்ததியினர் வெளிநாடுகளை நம்பி வாழ வேண்டிய அவசியமிருக்காது. அத்தோடு எமது தாயகம் வெளிநாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக இருக்கப் போவதில்லை.
மாறாக மேட் இன் ஸ்ரீலங்கா என்ற நாமத்துடனான உற்பத்திகளை உலகம் பூராவும் பறைசாற்றும் நாடாக மாற்றமடையும். இன்று இத் துறைமுகத்தில் நிரம்பும் நீர் எமது நாட்டு சௌபாக்கியமாகும். இதன் மூலம் சுய பொருளாதாரம் தோற்றுவிக்கப்படுகிறது. பணம் இல்லை, அபிவிருத்தி இல்லை என வெறுமனே பார்த்துக் கொண்டிராது எமது பலத்தை பயன்படுத்தி நாட்டை எவ்வாறு அபிவிருத்தியடையச் செய்ய முடியுமென்பதற்கு இத் துறைமுகம் சிறந்த உதாரணமாகும்.
சீனா எமது வரலாற்று ரீதியான நட்பு நாடு. இத்தருணத்தில் இப்பணிகளை செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரதேசம், வறுமை என்ற வசனங்களால் பல வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேசங்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். பொருளாதார கேந்திர நிலையமாக மாறும் என்கிறார் ஜனாதிபதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’