வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவை த.தே.கூ ஏற்கவில்லை - சிவசக்தி ஆனந்தன் எம்.பி

போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வரவுள்ள ஐ.நா விசாரணைக் குழுவை வரவிடாது தடுக்கும் ஒரு முயற்சியே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவாகும்
.அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க வரவில்லை, என கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவை தமது கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அது ஒரு வெறும் கண்துடைப்பு என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்ய வவுனியா வந்தபோது, வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வன்னி சம்பவங்கள் குறித்து சாட்சியமளிக்க முன்வராமை குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே சிவசக்தி ஆனந்தன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார். வவுனியா நகர். செட்டிகுளம், நெடுங்கேணி ஆகிய இடங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவினர் சாட்சியங்ளை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’