வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

வடமாகாண டெங்கு ஒழிப்பு வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் ஆரம்பம்.

டமாகாண டெங்கு ஒழிப்புதினம் இன்றையதினம் யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் (ஸ்ரான்லி கல்லூரி) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகியது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் பிராந்திய உதவி ஆணையாளர் திருமதி சிவலிங்கம் பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேதநாயகம் ஆகியோருடன் சுகாதார கல்வி மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் பங்குகொண்டனர்.
இன்றுகாலை யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்த பிரதம அதிதிகள் கல்லூரி பாண்ட் அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கேற்றல் மற்றும் தேசிய மாகாண கல்வித்திணைக்கள கொடியேற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் மண்வெட்டிகள் மூலம் பற்றைகளை அகற்றி சிரமதானப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர். இதன் தொடர்ச்சியாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்றுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாது காலத்தின் தேவை கருதி தொடர்ச்சியாக முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயக்கத்திடம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் குப்பைகளை இடுவதற்கான பாதுகாப்பான பிளாஸ்டிக் கொள்கலன்களைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.ஞானகாந்தனின் நன்றியுரையினைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் பரவலாக ஆரம்பமாகி இடம்பெற்றன.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’