மன்னார் பேசாலை யூட் வீதியில் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு நேற்றிரவு 9.30 மணியளவில வீடு நோக்கி சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இனந்தெரியாத நபர்கள் பல இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வர்த்தகர் கடையினை மூடிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அவதானித்த முகமூடி அணிந்த சிலர் குறித்த வர்த்தகரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தினத்தன்று 10 மணியளவில் பேசாலை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடி ஒன்று இனந் தெரியாத நபர்களினால் பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’