இலங்கை மீது கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்கா காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகளை இலங்கை எடுக்கும் முயற்சிகளை இலங்கை ஏற்கப்போவதில்லை என்றும், இந்த விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்க போவதில்லை என்றும் அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று அறிவித்தார்
."இன மோதலுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் மனிதாபிமான நடவடிக்கை, போர் நிறுத்த உடன்பாடு என்பவற்றை ஆராய்வதற்கு என இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணைக்குழு என்னும் சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிலையில் வேறு எந்த விசாரணையையும் தேவை இல்லை" எனவும் அவர் கூறினார்.அநுர பிரியதர்சன யாப்பா மேலும் கூறுகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் பல நாடுகள் தோல்வி கண்டன, தோல்வி கண்டும் வருகின்றன. ஆனால் இலங்கை வெற்றி கண்டது. இந்த வெற்றியை தோற்கடிப்பதில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் விடாப்பிடியாக உள்ளன என்றார்.
தகவல்கள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரிய ரத்ன இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில்.
"இலங்கையில் அண்மைக்கால மோதலின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை விசாரணை செய்ய இலங்கை அரசாங்கத்தாலும் சர்வதேச அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளை மதீப்பீடு செய்தல் பற்றி காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதுவர் ரெப் என்பவரால் தயாரிக்கப்பட்டு அமெரிக்க காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் இலங்கையின் கருத்து என்னவெனில் உலகின் மிகப் பயங்கரமான இயக்கமாக கருதப்பட்ட எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை மே 2009யில் இலங்கை தோற்கடித்தது. இந்த இயக்கத்தால் உருவான மோதல் நிலைமைகளை இலங்கை மக்களை மிக மோசமாக பாதித்தது. ஆனால், இப்போது நாட்டை கட்டியொழுப்புவதிலும், செழிப்பும் அமைதியும் மிக்க புதிய சகாப்தத்தை உருவாக்குவதிலும் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளது. கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வது உண்மையான இணக்கப்பட்டு அவசியம் என்பதும் இலங்கைக்கு தெரியும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவைஅமைத்துள்ளார். அது இப்போது செயற்படுகின்றது. அது நீதிக்கும் பாரபட்சம் இன்மைக்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
அதே சமயம் அரசாங்கம் மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்திவிட்டது. மீள் குடியேறியவர்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து உதவி வருகிறது. கடந்த சில மாதங்களில் அரசாங்கம் அவசரகால விதிகள் பலவற்றை நீக்கிவிட்டுள்ளது" என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’