இலங்கை அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பலைத் தொடர்ந்து மேலும் இரண்டு அகதிக்கப்பல்கள் கனடா நோக்கி செல்லவிருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொ ஹான் குணரத்னவின் தகவல்படி எம் வீ சன் சீ கப்பல் தொடர்பில் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் இந்த இரண்டு கப்பல்களும் தமது பயணம் குறித்து தீர்மானிக்கும் என கூறப் பட்டுள்ளது.
200 அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பல் பல மாதகாலமாக சர் வதேசக் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் செல்லும் தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற கருத்தை ரொஹான் குணரட்னவே முதலில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் எதிர்வரும் வாரமளவில் குறித்த கப்பல் கனடாவின் கடற்பரப்பை அல்லது பிரிட்டிஷ் கொலம்பிய நகரைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில கப்பலை கனடாவின் எல்லைக்குள் அனுமதிக்காமல் இடைநிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும் இரண்டு கப்பல்கள் தமது கனேடிய பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள் ளன.
தற்போது அவர்கள் தமது பயணத்தை மேற்கொள்ள தயாராக இருப் பதாகவும் எனினும் சன் சீ கப்பலில் உள்ள அகதிகள் தொடர்பில் கனே டிய அரசாங்கம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை அவ தானித்து அதன் அடிப்படையிலேயே அவர்கள் செல்லவுள்ள நாடு குறித்த தீர்மானத்தை மேற்கொள்வர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை யின் கனேடிய உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் தாம் அறிந்திருக்க வில்லையயன குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் கனேடிய வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களமும் இது தொடர்பில் கருத்து வெளியிட மறுத்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’