ஐரோப்பாவைச் சேர்ந்த 105 வயதான உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் வயோதிபர்களுக்கான உடற்பயிற்சி முகாமொன்றை நடத்தி, தான் எவ்வாறு இத்தனை வயது வரை உறுதியான உடல்வாகுவுடன் இருக்கிறார் என்பது குறித்து பாடம் நடத்தியுள்ளார்
.ஐரோப்பாவின் மிக வயதான உடற்பயிற்சி ஆசிரியர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ருமேனியாவின் தலைநகர் புச்சாரெஸ்ட்டைச் சேர்ந்த எலினா டாராஸ்வ்ஸ்கி (Elena Tarcevscki) எனும் இப்பெண் 105 வயதிலும் ஜிம்னாஸ்டிக் ஆசிரியையாக உள்ளார்.
கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக அவர் ஒவ்வொரு அதிகாலையிலும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வருகிறாராம்.
''நான் ஒரு போதும் புகைப்பிடித்ததில்லை. அதேவேளை நான் எப்போதும் மது அருந்தியதுமில்லை. எத்தகைய பிரச்சினை இருந்தாலும்கூட நான் எப்போதும் உடற்பயிற்சி செய்வேன்.
இங்கு கூடியிருப்பவர்களில் சிலர் இளைஞர்கள். இப்போதுதான் அவர்களுக்கு 70 வயதாகின்றது. எனக்கு அவர்களை சிறந்தவர்களாக வெளிக்கொணர முடியும்'' என்று அவர் அப்பயிற்சி முகாமில் தெரிவித்துள்ளார்..
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’