அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்
.அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள்; எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட், Battlecam எனும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையத்தளம் வேடிக்கையான செயல்களுக்காக மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்களை பரிசாக வழங்கி; வருகிறது. இச்செயற்பாடுகள் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
நடிகராகவும் விளங்கும் அல்கி டேவிட், ஒபாமாவின் முன் நிர்வாணமாக தோன்றுபவர்களுக்கு ஒரு லட்சம் டொலர் வழங்குவதாக முதலில் அறிவித்ததாக டெய்லி டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
எனினும், பின்னர் இந்த துணிச்சல் மிகுந்த வேடிக்கைக்கு இப்பணம் போதுமானது அல்ல என்று அவர் கூறியுள்ளதுடன் அத்தொகையை ஒரு மில்லியன் டொலராக அதிகரித்துள்ளார்.
ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றி பரிசு பெற விரும்பும் நபர் தனது வயிற்றில் மேற்படி இணையத்தளத்தின் பெயரை எழுதியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மக்களை தான் கோபமூட்டுகிறார் என்ற கருத்தை அல்கி டேவிட் நிராகரித்துள்ளார்.
'இரகசியப் பாதுகாப்புச் சேவைப் பிரிவினர் என்னை அப்புறப்படுத்திக்கொண்டு வெள்ளை மாளிகையின் துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்தின் பின்னால் வைத்திருப்பது போல் எண்ணிப் பார்த்தேன். ஆனால் எல்லாமே வேடிக்கைதான்' என்கிறார் அவர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’