வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஜூலை, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் கருத்து / / அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்மானங்கள் தூதரகங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளிப்பு ..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் கருத்து ..!
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கூடி கலந்துரையாடிவரும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமது கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் இந்தக் கட்சிகள் கோரிக்கைக் கடிதமொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; தலைவர் ஆர். சம்பந்தனிடம் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் இக்கோரிக்கைக் கடிதத்தினை நேரடியாகவே அவரிடம் கையளிக்கவிருப்பதாக புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்றைக்கு பதினான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் மிக முக்கியமான ஒரு தமிழ்க் கட்சியென்பதை எவருமே மறுக்க இயலாது. ஆகவே அவர்களும் இதற்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எல்லாருமாக சேர்ந்து, அதாவது அவர்களும் சேர்ந்தால்தான் பூரணமாக அனைத்துக் கட்சிகளும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றன என்று நாம் கருதமுடியும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடாத்துமா என ஊடகவியலாளர் கேட்டதற்கு, முதலாவதாக இந்த தமிழ்க் கட்சிகளுக்கிடையிலே ஒரு ஒத்தகருத்தைக் கொண்டுவந்த பின்பு முஸ்லிம் கட்சிகளுடன் பேசுவது நல்லது என்பதுதான் எங்களுடைய அபிப்பிராயம். அதற்காக அவர்கள் இப்போது வந்தால் நாங்கள் அதற்கு மறுப்பல்ல. அவர்களுக்கு நேரடியாக இன்னும் நாங்கள் ஒரு அழைப்பு விடுத்துப் பார்க்கவில்லை என்று புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்மானங்கள் தூதரகங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளிப்பு ..!

இனப்பிரச்சினைக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்மானங்களை தாம் வெளிநாட்டு தூதரகங்களிடம் கையளித்துள்ளதாக ஐ.தே. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தத் தீர்மானங்கள் கடந்த 19 ம் திகதியன்று கொழும்பில் வைத்து ஆர். யோகராஜன் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் ஆகியோரால் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அவை தூதரகங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளிக்கப்பட்டன. இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கருத்து வெளியிடுகையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை வெளிநாட்டு தூதரங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளித்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி. ஆர். எல். எவ், புளொட் ஆகிய கட்சிகள் இதுபற்றிய தம்முடைய அபிப்பிராயத்தை விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்வா h ர்களாயின் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையாக அமையுமென்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’