வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஊடகங்கள் தாக்கப்படுவது நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும்-கரு ஜெயசூரிய

ஊடகங்களை பாதுகாக்கும் ஜனநாயக நாட்டில் இவ்வாறான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என ஐ.தேகவின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்'அலுவலகத்திற்கு சென்ற வேளை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இத்தாக்குதல் தொடர்பில் நாம் எவரையும் சாடவில்லை.இந்த நாட்டில் கடந்த காலங்களில் சிரச மற்றும் சண்டே லீடர் ஆகிய ஊடக அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் பலர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
நாட்டில் தற்பொழுது நிலவும் சமாதான சூழலை தொடர்ந்து இவ்வாறான மிலேச்சத் தனமான தாக்குதல்கள் நாட்டில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமையும். யார் இதை செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
ஊடக அலுவலகங்களை தாக்கியோர் மற்றும் ஊடகவியலாளர்களை படுகொலைக்கு காரணமானவர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தபப்டவில்லை . அவர்களை கண்டு பிடித்து உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தாக்குதலுக்கு இலககான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' இன் பணிப்பாளர்,ஊழியர்கள் ஆகியோருக்கு ஐ.தேக சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’