வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஜூலை, 2010

பொலிஸ் அத்தியட்சகர் ஜெயவர்த்தனாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கட்டாய விடுமுறையில் அனுப்பும் தீர்மானத்திற்கு எதிராக, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு செப்டெம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கட்டாய விடுமுறையில் அனுப்பும் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அவருக்கு இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மே 25ஆம் திகதி இந்த தற்காலிக தடையுத்தரவு வழங்கப்பட்ட போதும் இதுவரை நீதிமன்றத்தின் கட்டளைப்படி எதுவும் நடக்கவில்லை என சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் நெறிப்படுத்தப்படும் என சட்டத்தரணி அலிய பீரிஸ் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
உயர் நீதிமன்றின் கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளதா என ஒரு வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஜுன் 23ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தல் கடமையில் பக்கச் சார்பாக செயற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’