வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஜூலை, 2010

இலங்கையில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கைது

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சென்ற மிகின் லங்கா விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை.
ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஆசனவாயில் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
பின்பு ஏழு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து, உள்ளே வைத்திருந்த தங்க பிஸ்கட்களை எடுத்தனர்.
பிடிபட்ட அனைவரும் ராமநாதபுரம், சென்னை, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். பிடிபட்டு விசாரணை நடத்திய எட்டு பேரில் ஒருவர் தப்பிவிட்டாரெனவும் கூறப்படுகிறது.
இவர்களிடம் இருந்து சுமார் 90 லட்சம் ரூபா மதிப்புள்ள சுமார் 5 கிலோ கிராம் தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அளவு தங்கம் பிடிபடுவது திருச்சி விமான நிலைய வரலாற்றில் இது முதன் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் குருவியாக செயல்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் தங்கம் வைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரியாது எனவும் சுங்கப்பிரிவு ஆணையாளர் சிவசங்கரன், துணை ஆணையாளர் ஹேமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’