வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

நாம் அனைவரும் கடினமாக உழைப்பதன் மூலமே இந்த பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முடியும் - பாராளுமன்றக் குழுக்களி;ன் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார்

நாம் அனைவரும் கடினமாக உழைப்பதன் மூலமே இந்தப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என திருவையாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். இன்றும் பாடசாலைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட மாணவர்கள் தளபாடங்கள் இன்றி பாய்களிலும் வெறும் தரையிலும் இருந்து படிக்கும் நிலையினைக் கல்வி திணைக்கள புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று இந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் காலணிகள் அலுவலக உபகரணங்கள் வாங்குவதற்கு சிறுவர் பாதுகாப்பு நிதியம் முன்வந்துள்ளமை பாராட்டுதலுக்குரியது விடயமாகும்.
எனவே நாம் எல்லோரும் கடினமாக உழைப்பதன் மூலமே இந்த பிரதேசத்தின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மேலும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் கிளிநொச்சி மாவட்டத்தில் தனது காரியாலயத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது எமது கல்வி சமூகத்துக்கும் பெரும் வரப்பிரசாதம் எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கனகாம்பிகை அ.த.க பாடசாலைக்கும் விஜயம் செய்த சந்திரகுமார் அவர்கள் அப் பாடசாலைக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு நிதிய முகாமையாளர் ஜெகநாதன் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் கிளி. உதவி அரசாங்க அதிபர் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளரும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’